MENU

FAQs

களவீரர் / கள வீராங்கனை என்றால் யார்? நான் எவ்வாறு களவீரர் / வீராங்கனையாக மாறுவது.?
Who is a Champion? How can I become a Champion?

களவீரர் / கள வீராங்கனைகள் தன்னார்வலர்களே,ஒரு குடிமகன் தனது தொகுதியில் உள்ள குறைகளை மய்யம் விசில் செயலியில், பதிவேற்றிய பின்னர் அந்த குறைகளின் நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்ப்பபவர்களே களவீரர் / களவீராங்கனைகள்.

களவீரர் / களவீராங்கனைகளாக நீங்கள் ஆக வேண்டுமா ? கீழ்கண்ட இரண்டு முறைகளை பின்பற்றுங்கள்:

  • விசில் செயலியை பயன்படுத்தத்தொடங்கும் பொழுதே, களவீரர் / களவீராங்கனை என்ற பெட்டியில் ”ஆம்” என்று பதிவிடுங்கள்

  • இச்செயலியை பயன்படுத்திக்கொண்டிருக்கும் பொழுதே உங்கள் சுயவிவரப் பகுதிக்கு சென்று களவீரர் / களவீராங்கனை பெட்டியில் சென்றும் ”ஆம்” என்று குறியிட்டு உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

உங்கள் விருப்பம் அங்கீகரிக்கப்பட்ட பின் நீங்கள் களவீரர் / களவீராங்கனையாக தொடரலாம்.

A Champion is a Citizen who volunteers to take up the responsibility of verifying issues reported by the Citizens of their constituency, to ensure it is genuine and valid.

To become a Champion, follow either of the two methods:

  • During sign up, tick the ‘Register as Champion’ checkbox to send out a request.

  • Anytime after sign up, visit Edit Profile and tick the ‘Register as Champion’ checkbox to send out a request.

You become a Champion when the request is accepted after the requisite profile verification.

குடிமகன்களுக்கும் களவீரர் / களவீராங்கனைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
What is the difference between Citizen & Champion?

பதிவு செய்துகொண்ட ஒவ்வொரு உறுப்பினருமே குடிமகன்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு குடிமகனும் தங்களைச் சுற்றி நடக்கும் குற்றம் குறைகளை பதிவிடலாம்.அக்குறைகள் சரி செய்யப்பட்டவுடன் அது குறித்த விவரங்களையும் பதிவு செய்யலாம்.

களவீரர் / களவீராங்கனை என்பவர்கள் குடிமகன்களாக இருந்து சுயவிருப்பின் முலம் தன்னார்வலர்களாய் மாறி,பதிவு செய்யப்பட்ட குறைகளின் நம்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் ஆராய்ந்து,சரி பார்ப்பவர்கள்.

களவீரர் / களவீராங்கனைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள குறைகளை பார்ப்பது,அவற்றை ஆராய்வது, என்ற இரு பணிகளை செய்வர்.

Every registered user is automatically identified as a Citizen. A Citizen can report issues, view reported issues, and get notified when the issues reported by them are resolved.

A Champion is a Citizen who volunteers to take up the responsibility of verifying issues reported by the Citizens of their constituency, to ensure it is genuine and valid. Champions can verify the issues assigned to them, view reported issues, switch view (Champion to Citizen and vice versa), report issues, and get notified when the issues reported/verified by them are resolved.

என்னால் ஏன் குறைகளை பதிவு செய்திட முடியவில்லை ?
Why am I not able to submit issue?
  1. குறைகளை பதிவு செய்வதற்கு முன்னர் ”கட்டாயம் பதிவு செய்திட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பதிவு செய்துவிட்டீர்களா என சரி பார்க்கவும்.

  2. விடுபட்டிருக்கும் அனைத்து தரவுகளையும் பதிவு செய்யவும்.ஏதேனும் விவரங்கள் விடுபட்டிருந்தால் உங்களால் பதிவேற்றம் செய்யமுடியாது.

  3. உங்கள் பதிவு சரியானது தான் என ஆய்வு செய்வதற்கு கண்டிப்பாக புகைப்படம் அல்லது காணொளிக்காட்சிகள் அவசியம்.

  4. தமிழ் நாட்டின் குடிமகன்களாக இருந்தால் மட்டுமே உங்களால் குறைகள் குறித்து பதிவு செய்ய முடியும். நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளியே இருந்தால்,குற்றங்களை ஆய்வு செய்தபின் செயலியில் பதிவேற்றம் நடந்த பின்னரே உங்களால் பார்க்க முடியும்.

Ensure that you’ve duly filled in all the requisite blanks before hitting submit. It is mandatory to include photos or videos as proof, and to mark the location of the issue before submitting it.

Only residents of Thamizh Nadu have the option of reporting an issue. If you are outside of TN you can only view the issues reported after validation by the champions and the administrator.

நான் சுட்டிக்காட்டிய குறைகளை எவ்வாறு நீக்குவது அல்லது தவறாக பதிவு செய்திருந்தால் அதை எப்படி செயலியில் சரி செய்வது?
How do I edit or delete an issue I reported?

ஒருமுறை பதிவு செய்த பின்பு உங்களால் அதை நீக்கவோ மாற்றவோ முடியாது. எனவே பதிவு செய்வதற்கு முன்னர் அனைத்து விவரங்களையும் சரி பார்த்த பின்பு செயலியில் பதிவேற்றம் செய்யவும். கண்டிப்பான முறையில் உங்கள் பதிவை நீக்கவேண்டும் என நீங்கள் நினைத்தால்,முழு விவரங்களுடன் எங்களை whistle@maiam.com என்ற மின்னஞ்சலில்

தொடர்பு கொள்ளுங்கள்.

Once submitted, the reported issue cannot be edited or deleted. Please ensure that all the information entered is correct before hitting the submit button. If still need something removed please email us with all relevant information to whistle@maiam.com

ஊழல் குறித்து எவ்வாறு பதிவிடுவது?
How do I report corruption?

மற்ற குற்றம் குறைகளை எவ்வாறு பதிவிடுகிறீர்களோ அது போலவே ஊழல் குறித்தும் பதிவிடலாம். முழு விவரங்களையும் பதிவிட்ட பின்பு இறுதியில் ”ஊழல் குறித்த பதிவு” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பெட்டியில் நீங்கள் உங்கள் தேர்வை செய்யவேண்டும்.

ஊழல் குறித்த உங்கள் புகாரையோ பதிவையோ வேறு எவரும் பார்வையிடமுடியாது.செயலியின் நிர்வாகி மட்டுமே உங்களில் ஊழல் புகார் குறித்து, அதை எவ்வாறு / யாரிடம் எப்படி எடுத்துச்செல்வது என்பது குறித்த இறுதி முடிவு எடுப்பார்.

Reporting a case of corruption is similar to reporting other issues. You will have to explicitly tick the checkbox in the end to mark it as a case of corruption. All corruption related issues will not be shown to the champions or the citizens in the app. Administrator will be the only person who will decide on how to escalate the matter further.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர் ஆகாமல் இந்த மய்யம் செயலியை பயன்படுத்த முடியுமா?
Can I sign up without joining the party?

மய்யம் விசில் செயலி மக்கள் நீதி மய்யத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமேயான ஒரு தனிச்செயலி. இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக வேண்டும். இந்த செயலியில் நீங்கள் பங்கேற்பதன் மூலம்,தமிழ்நாட்டின் ஆக்கப்பூர்வமான நிர்வாகத்திற்கும்,ஊழலற்ற சமூகமாக தமிழ்நாடு வளர்வதற்கும் உறுதுணையாக இருக்கிறீர்கள்.

Maiam Whistle is exclusively for the members of Makkal Needhi Maiam. During sign up it's mandatory for users to join the party. Through the forum you can actively participate in the governance of the state by helping to solve civic issues and taking steps to curb corruption.

என்னால் பதியப்பட்ட குறைகள்/குற்றங்கள்/ புகார்கள் எப்பொழுது தீர்க்கப்படும்?
When will my issues get solved?

ஒரு குற்றமோ குறையோ அல்லது புகாரோ இச்செயலியில் பதிவு செய்யப்பட்டபின்,அதன் நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை களவீரர் / கள வீராங்கனைகளால் ஆராய்ந்து உண்மை அறியப்படும்.அவ்வாறு உண்மை அறியப்பட்ட குறைகள் மற்றும் புகார்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அது குறித்த தகவல் தெரியப்படுத்தப்படும்.

இந்தச் செயலியின் மூலமாக மக்கள் நீதி மய்யம் மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ளவும் அது குறித்த ஒரு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவுமே முனைகிறது.

Once an issue is reported, it will be verified by Champions to check if it is valid. Verified issues will be escalated to the concerned government authorities by the Admin for further resolution. Makkal Needhi Maiam uses this tool to understand the issues citizens are facing and encourages citizens to highlight the issue.

இணையம் இல்லாத பகுதிகளில் எவ்வாறு நான் குறைகள் மற்றும் குற்றங்கள் குறித்து பதிவிடுவது ?
How do I report issues at places with no connectivity?

இணையம் இல்லாத பகுதியில்,கூட உங்களைச் சுற்றி இருக்கும் குறைகள் மற்றும் குற்றங்களை நீங்கள் புகைப்படமாகவோ அல்லது காணொளிகாட்சியாகவோ பதிந்து கொண்டு, இணையம் இருக்கின்ற பகுதிக்கு வந்த பின் நீங்களாகவே உங்கள் இடத்தை சரி செய்து பின்னர் மீண்டும் செயலியில் பதிவு செய்யமுடியும்.

If you are at a location with no connectivity, you can submit the report at a later period or from a different location where you can find network coverage. While at the original location, click pictures or take videos to document the issue. During report submission, manually change the location to register the issue under the concerned constituency with proof.

நான் தமிழகத்திற்கு வெளியே வசிக்கின்றேன்.நான் எவ்வாறு குறைகளை பதிவு செய்ய முடியும்?
I live outside Thamizh Nadu, Can I report issues?

தற்போது மய்யம் விசில் செயலி தமிழகத்தில் இருப்பவர்கள் மட்டும், தமிழகத்தில் நடைபெறும் குற்றம் குறைகள் மற்றும் ஊழல் குறித்த புகார்களை பதிவு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் இருக்கும் மாவட்டங்கள் அனைத்தும் தனித்தனியே பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக குறைகளை பதிவு செய்யும் வசதி இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் தமிழகத்திற்கு வெளியே இருந்தாலும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் புகார்களை காண முடியும்.

தமிழகத்திற்கு வெளியே வசித்துக்கொண்டு தமிழகத்தில் நிலவும் குற்றம் குறைகளை நீங்கள் பதிவு செய்ய நினைத்தால் நீங்கள் உங்கள் வசிப்பிடத்தின் பகுதியை தேர்ந்தெடுத்து பின் அவ்விடத்தின் குறைகளை பதிவு செய்யலாம்.

Currently, Maiam Whistle is only available to the citizens of Thamizh Nadu to report civic issues and cases of corruption pertaining to the state. The app is made effective by dividing the state based on constituencies to raise and resolve issues. You can, however, use the app to view reported issues. If you are living outside and still would like to report on an issue you will have to edit your location to a specific area in TN and report the issue.

என்னைப் பற்றிய விவரங்களோ அல்லது களவீரர் / களவீராங்கனை குறித்த விவரங்களோ வெளியே தெரியப்படுத்தப்படுமா?
Will my identity be revealed? Will Champions identity be revealed?

மய்யம் விசில் செயலியின் முதல் மற்றும் முக்கிய நோக்கமே தங்களை சுற்றி நிகழும் குற்றம் குறைகள் குறித்து தன்னார்வம் கொண்டு குரலெழுப்ப முன்வருபவர்களை வரவேற்று அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான தளத்தை ஏற்படுத்துவதே ஆகும்.

எனவே எந்த நிலையிலும் எக்காரணத்தினாலும்,புகார் அளிப்பபவரின் சுய விவரமோ அல்லது வேறு எந்த தகவலோ யாருக்கும் எவ்வழியிலும் தரப்படாது.உங்கள் முகப்பு பக்கத்தைக் கூட இன்னொருவரால் பார்க்க இயலாது, பதிவேற்றம் செய்யப்படும் குற்றம் குறைகளை மட்டுமே பார்க்கமுடியுமே தவிர யாரால் புகார் அளிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடியாது.

இச்செயலியின் நிர்வாகியால் கூட களவீரர் / களவீராங்கனைகளை அவர்களின் தொகுதியின் களவீரர் / களவீராங்கனைகளாக மட்டுமே அறியப்படுவார்களே அன்றி அவர்களின் சுய விவரங்களை தெரிந்து கொள்ளமுடியாது.

Under no circumstances will your identity or profile be visible to another user. Only you can view the issues you have reported or verified. The main goal of Maiam Whistle is to invite citizens to be whistleblowers with no fear of consequences. Even as a Champion, the Admin who assigns tasks only identifies you as a Champion belonging to a particular constituency, never by your profile.

மக்கள் நீதி மய்யம் குறைகள் மற்றும் குற்றங்களை தீர்த்துவிடுமா?
Will Makkal Needhi Maiam solve issues?

மக்களை தன்னெழுச்சியாக, தங்களை சுற்றி நிகழும் அவலங்களை, குற்றங்களைக் குறித்த விழிப்புணர்வு பெறவேண்டும்.

அது குறித்த குரலை எழுப்பி பொறுப்புணர்வுடன் கூடிய மேம்பட்ட குடிமகன்களாக மாறவேண்டும்.அதை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டு முன்னெடுக்கப்படும் ஒரு கருவி மட்டுமே இந்த மய்யம் விசில்.

இதுவே மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய கடமையாகும்,தவிர ஒவ்வொரு தொகுதியையும் பாதிக்கும் அனைத்து அவலங்கள் குறித்தும் ஒரு தெளிவான,நம்பகத்தன்மை கொண்ட பார்வையை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இச்செயலி மூலமாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் குற்றங்கள் மற்றும் குறைகளை எடுத்துச்சென்று அவர்களுக்கு தெரியப்படுத்தி அதன் மூலமாக அவற்றை சரி செய்வதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.மக்கள் நீதி மய்யம் நேரடியாக குற்றங்களை குறைகளை சரிசெய்வது இதன் நோக்கமல்ல.

Maiam Whistle is an initiative by the party to garner greater citizen participation in understanding the issues of the state. It also acts as the primary source of information for the party to recognize major issues affecting different constituencies. Through the forum the party will ensure that the reported issues are escalated to the concerned authorities for appropriate action, but will not directly be in a position to solve any issues.

Notifications